சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணியும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவுப்பொதி வழங்கலும்.
மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் 20-ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, இன்று துவிச்சக்கர வண்டி பேரணியும் மனிதாபிமான உதவி வழங்கும் நிகழ்வும் மட்டக்களப்பில் நடைபெற்றன.
மட்டக்களப்பு திருப்பெருந்துறை சந்திக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இத்துவிச்சக்கர வண்டி பேரணி, கல்லடி மணிக் கூட்டுக் கோபுரம் வரை சென்று, அங்கிருந்து மீண்டும் மட்டக்களப்பு காந்தி பூங்காவை வந்தடைந்தது
கழகத் தலைவர் லயன்ஸ் எஸ். மனோகரன் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் 306 D10 லயன்ஸ் கழகத்தின் ஆளுநர் லயன்ஸ் க. லொகேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
விசேட அதிதிகளாக துணை ஆளுநர்களான லயன்ஸ் ஹாகீர் அகமட், லயன்ஸ் ரீ. ஆதித்தன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கழகத்தின் 20 ஆண்டு கால சேவையை நினைவுகூரும் வகையில், மனிதாபிமான அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உலர் உணவுப் பொதிகள் காந்தி பூங்காவில் வழங்கப்பட்டன.
லயன்ஸ் கழகத்தின் முக்கிய உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மட்டக்களப்பு எஸ். வரதராஜன்





