பாலத்திலிருந்து லொறி கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு

வாரியப் பொல, நாரம்மல வீதியின், பொலமுணுஓயா பாலத்திலிருந்து லொறியொன்று கவிழ்ந்ததில் அதன் சாரதியும் உதவியாளரும் உயிரிழந்துள்ளனர்.

லொறி செங்கற்களை ஏற்றிக்கொண்டு ஆனமடுவ பகுதியிலிருந்து மீரிகம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சடலங்கள் கட்டுப்பொத்த பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.