வியட்நாம் அரசு எரிபொருள் மீதான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரி, விசேட கொள்வனவு வரி ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
ஈரான் மீதான போரினால் உலக சந்தையில் மசகு எண்ணெய், எரிவாயு விலைகள் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், வியட்நாம் தமது உள்நாட்டு சந்தையை ஸ்திரப்படுத்துவதற்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மீதான இந்த வரி நீக்கம் எதிர்வரும் ஏப்ரல் 15-ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
