மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 2177 திட்டங்களுக்காக 11938 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இன்று (27) தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணப்புக்குழு கூட்டம் கைத்தொழில், தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (27) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, எம்.எ ல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், ஞானமுத்து ஸ்ரீநேசன், இராசமாணிக்கம் சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத் ஆகியோரது பங்கேற்புடன் இக் கூட்டம் இடம் பெற்றது.
2026 ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 2177 திட்டங்களுக்காக 11938 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் முன்னேற்ற மீளாய்வு செய்யப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான முன்மொழிவுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
வரதராசன், எஸ். சினிஸ்கான், மட்டக்களப்பு






