வியட்நாம் படகு விபத்தில் 34பேர் பலி

வியட்நாம் படகு விபத்தில் 34பேர் பலி யாகி மேலும் பலர் காணாமற்போயுள்ளனர்.

தலைநகர் ஹனோயிலிருந்து சுற்றுலா சென்ற வியட்நாம் பிரஜைகளின் படகே விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடும் காற்று மழையின் காரணமாக மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனினும் நீரிலிருந்து 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

படகு விபத்திற்குள்ளானபோது அதில் 53 பேர் பயணம் செய்ததாகவும் திடீரென ஏற்பட்ட காற்றினால் படகு கழிந்ததாகவும் வியட்நாம் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினரும் கடற்படையினரும் தெரிவித்துள்ளனர்.

கடுங்காற்று, மின்னல் தாக்கத்துடன் மழை பெய்தபோது நேற்றுப் பிற்பகலில் வானம் இருண்டு காணப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

தமது பெற்றோருடன் பயணித்த 10 வயது சிறுவன் ஒருவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.

இதுவரை மீட்கப்பட்ட சடலங்களுள் எட்டுச் சிறுவர்கள் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.