குமார ஜயகொடிக்கு எதிரான பிரேரணை ஏப்ரலில் விவாதம்

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி நடைபெறுகிறது.

பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி முற்பகல் 11.30 முதல் மாலை 5.30 வரை இந்த விவாதம் நடைபெறும்.

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

தரமற்ற நிலக்கரி விவகாரத்தை முன்னிலைப்படுத்தி, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.