மகா சிவராத்திரியை ஒட்டி மட்டக்களப்பில் பாரதத்தின் பழைமை வாய்ந்த ஜோதிலிங்க தரிசன வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதேவேளை மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் ராஜ யோக நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 12 ஜோதிலிங்க தரிசன வழிபாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது
அப்போது டிக்பா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணம் சேர்க்கும் சமூகப் பணி முன்னெடுக்கப்பட்டது. சிவராத்திரி வழிபாடுகளை ஒட்டி போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிவராத்திரியின் மகிமை பொதுமக்களின் மனக்குறையைத் தீர்க்கும் மகா யாக நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இடம் பெற்ற ஜோதிலிங்கத் தரிசன நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு வரதன்






