மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென கடும் மழை

AdWorமலையகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென கடும் மழை பெய்தமையால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததோடு அச்சமுமடைந்தனர்.

மாத்தளை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கண்டி மாவட்டத்தின் பல இடங்களிலும் பிற்பகல் வேளையில் கடும் மழை தொடர்ச்சியாக பல மணித்தியாலங்கள். கடும் மழை பெய்தது.
காலை வேளையில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் எதுவும் அற்ற நிலையில் மழை பெய்வதனால் ஏற்படும் அசௌகரியங்களை தடுப்பதற்கான முன் ஏற்பாடுகள் எதுவுமற்ற நிலையில் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்த அதே நேரம் தித்வா புயலின் பின்னர் ஏற்பட்ட கடும் மழையின் பாதிப்புகள் மீண்டும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும்,மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள நில வெடிப்புகள் மழை நீர் உட்புகுவதன் தாக்கத்தினால் மண் சரிவு அபாய நிலையை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சமும் மேலோங்கியுள்ளது.

மாத்தளை,எல்கடுவ,உக்குவலை,வத்தேகம,மடவலை,பன்விலை,மடுல்கலை,கபரகலை,பெத்தேகம,கோமரை, போன்ற பகுதிகளில் கடும் மழை பெயததோடு கண்டி நகர் மற்றும் அண்டிய பகுதிகளிலும் நுவரெலியா மாவட்டத்தின் பூண்டுலோயா உட்பட்ட பல இடங்களிலும் புசல்லாவை பகுதியிலும் பிற்பகல் வேளையில் மழை பெய்துள்ளது.

பன்விலை நிருபர் ம. நவநீதன்