கண்டி – இராகலை வீதியில் இந்திய இராணுவத்தின் பொறியியற் பிரிவினர் நிர்மாணித்த பெய்லி பாலம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன, கல்வி, உயர்கல்வி பிரதியமைச்சர் கலாநிதி மதுர செனவிரடன் ஆகியொர் சனிக்கிழமையன்று (10) பாலத்தைத் திறந்துவைத்தனர்.
இந்தியா இலங்கைக்கு வழங்கும் 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியின் ஓர் அங்கமாக இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஊவா மாகாணங்களை இணைக்கும் கண்டி-இராகலை வீதியில் 100 நீளத்தில் இந்தப் பாலம் அமைந்துள்ளது.



