இந்தியப் பிரதமரின் விசேட தூதுவராக கலாநிதி ஜெய்சங்கர் இலங்கை வருகிறார்

இந்தியப் பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடியின் விசேட தூதவராக, இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி திசுப்பிரமணியம் ஜெய்சங்கர் நாளை (23) இலங்கை வருகிறார்.

ஜனாததிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் அவர் விசேட சந்திப்பை மேற்கொள்வாரென்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

த்வா புயலின் தாக்கத்தின்போது இந்தியாவின் சாகர் பந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறித்தும் இந்தச் சந்திப்பின்போது கலாநிதி ஜெய்சங்கர், ஜனாதிபதியுடன் கலந்துரையாடுகிறார்.