வடிகான் மூடிகள் உடைந்துள்ளமையினால்; பிரயாணிகள் விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக துறைநீலாவணை காளி கோவில் வீதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை காளிகோவில் வீதியின் எல்லையில் அமைந்துள்ள பழைய நீர்த்தாங்கி வீதிக்குச் செல்லும் சந்தியில் வடிகான் மூடிகள் உடைந்துள்ளமையினால் வீதியைக் கடக்கும் பிரயாணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகுவதுடன் விபத்துக்களும் இடம்பெற்றுவருவதாக பாதசாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அவர்கள் தெரிவிக்கையில் சுமார் நான்கு வருடத்திற்கு மேலாக இவ்வீதியின் வடிகான் மூடிசேதமடைந்த நிலையிi; இருப்பதுடன் துவிச்சக்கரவண்டிகள் கூட அவ்வீதியைக் கடந்து செல்லமுடியாத நிலையில் இருப்பதுடன் மழைகாலத்தில் பாடசாலை மாணவர்களும் இந்த பாதையினை பயன்படுத்த முடியாதுள்ளது
அவ்வீதி காப்பற் வீதியாக செப்பநிட்டபோது அதற்கான மூடியைக் கூட போடுவதற்கான ஒழுங்குகள் செய்யப்படவில்லை என பாதசாரிகள் குற்றம் சுமத்துவதுடன் இவ் வீதியில் உள்ள வடிகானுக்கான மூடியை போடுவதற்கு சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
