தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக சாமிமலை கவரவலை சந்தியில் வெள்ளம் ஏற்பட்டுப் போக்குவரத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் கனத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சாமிமலை கவரவலை சந்தி பகுதியில் கடும் வெள்ளம் ஏற்பட்டு வாகன போக்குவரத்து தடைப்பட்டது.
மேலும் கவரவலை கிராமத்தில் உள்ள பல இல்லங்களில் வெள்ள நீர் புகுந்து உள்ளது.இதனால் அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி அம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
