மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இன்று (26) பிற்பகல் 4.00 மணி முதல் நாளை பிற்பகல் 4.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த எச்சரிக்கை அறிவிப்பின்படி, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எச்சரிக்கை மட்டம் 3 – வெளியேறவும் (சிவப்பு எச்சரிக்கை) 

கண்டி மாவட்டம்: பஸ்பாகே கோரளை, உடபலாத்த, கங்க இஹல கோரளை, தொலுவ 

நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ, நோர்வுட், கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு 

எச்சரிக்கை மட்டம் 2 – அவதானத்துடன் இருக்கவும் 

காலி மாவட்டம்: தவலம, நாகொட, நெளுவ, நியாகம 

கண்டி மாவட்டம்: தெல்தோட்டை, பன்வில, யடிநுவர, கங்கவட்ட கோரளை, உடுநுவர 

கேகாலை மாவட்டம்: தெரணியாகலை, யட்டியாந்தோட்டை, மாவனெல்லை, தெஹிஓவிட்ட, அரநாயக்க 

நுவரெலியா மாவட்டம்: தலவாக்கலை 

இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, பெல்மடுல்ல 

எச்சரிக்கை மட்டம் 1 – விழிப்புடன் இருக்கவும் 

கொழும்பு மாவட்டம்: சீத்தாவக்க, பாதுக்கை 

காலி மாவட்டம்: கரந்தெனிய, எல்பிட்டிய, பத்தேகம 

களுத்துறை மாவட்டம்: வலல்லாவிட்ட 

கேகாலை மாவட்டம்: வரகாப்பொல, கேகாலை, கலிகமுவ, புலத்கோஹுபிட்டிய, ருவன்வெல்ல 

கண்டி மாவட்டம்: பாதஹேவாஹெட்ட, உடுதும்பர, மெததும்பர, குண்டசாலை, பாததும்பர, தும்பனே, பூஜாபிட்டிய, அக்குறனை, ஹதரலியத்த, ஹாரிஸ்பத்துவ 

மாத்தறை மாவட்டம்: கொட்டபொல, பிட்டபெத்தர, பஸ்கொட 

இரத்தினபுரி மாவட்டம்: கலவானை, எலபாத்த, அயகம, நிவித்திகலை, குருவிட்ட 

நுவரெலியா மாவட்டம்: நுவரெலியா