சம்மாந்துறை கணபதிபுரத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

சம்மாந்துறை கணபதிபுரத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மல்வத்தை 04 பகுதியில் இரு பிள்ளைகளின் தாயான 54 வயது பெண்ணே தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

வேலுப்பிள்ளை பிரவாவதி என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம். நசீலின் உத்தரவின் பேரில், திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் ஸ்தலத்திற்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டார்.

இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உயிரிழப்புக்கான காரணத்தை அறிய மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கெளசல்யா