பொலநறுவை வைத்தியசாலை வெடிப்புச் சம்பவம்: ஒருவர் மரணம்

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறைப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுகாதார ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கல்ஓயா பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் சமையலறைப் பகுதியில் இன்று (26) அதிகாலை 4.00 மணியளவில் ஏற்பட்ட இந்த வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் படுகாயமடைந்த மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

அவ்வாறு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவரே தற்போது உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவரும் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.