வட பகுதிக் கடலில் பெருந்தொகை போதைப்பொருள் கைப்பற்றல்

வடக்குக் கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது பெருந்தொகையான போதைப்பொருள்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இன்று (27) அதிகாலை யாழ்ப்பாணம் மாதகல், குசுமந்துறை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையிலேயே கடற்படையினர் இந்தப் போதைப்பொருள்களைக் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் படகு ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

வடக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட பிரிவுகளும் இலங்கை கடற்படைக் கப்பல் அக்போ நிறுவனத்தின் அதிகாரிகளும் இணைந்து இன்று இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பாக கடற்படையினர் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.