கிழக்கு மாகாண புதிய டிஐஜி கடமை பொறுப்பேற்றார்

கிழக்கு மாகாண புதிய டிஐஜி கடமை பொறுப்பேற்றார்.

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட சம்பத் குமார லியனகே இன்று (17) மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த சட்டத்தரணி வருண ஜெயசுந்தர கொழும்பிலுள்ள சிறுவர், மகளிர் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து உதவி பொலிஸ் மா அதிபரான சம்பத் குமார லியனகே விசேட புலனாய்வு பிரிவு பணிப்பாளராக கடமையாற்றி வந்தார்.

இந்நிலையில், இவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றதையடுத்து, கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.