மட்டக்களப்பு லொத்தர் விற்பனையாளர்களுக்கு காப்புறுதி பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தேசிய லொத்தர் சபையினால் மட்டக்களப்பு மாவட்ட விற்பனையாளர்களுக்கான காப்புறுதி திட்ட உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி
தேசிய ரீதியில் வீதி ஓரங்களில் அதிர்ஷடலாபச் சீட்டு விற்பனையாளர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு இத்திட்டம் இன்று (19) மட்டக்களப்பு மாவட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.



தேசிய லொத்தர் சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எஸ்.சிவகாந்த் தலைமையில் இடம்பெற்ற நிகழ்ச்சிக்குப் பிரதம அதிதியாக மட்டு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியம் கலந்து கொண்டு,மாவட்டத்தில் முதற்கட்டமாகத் தெரிவு செய்யப் பட்டவர்களுக்கான காப்புறுதி உறுதிப் பத்திரங்களை வழங்கினார்.
இன்றைய நிகழ்ச்சிக்குக் காப்புறுதி நிறுவன பிரதிநிதிகள், மாவட்ட விற்பனை முகவர்கள், விற்பனையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
தேசிய ரீதியில் ஐந்தாவது நிகழ்ச்சியாக மட்டக்களப்பு மாவட்ட இன்றைய நிகழ்ச்சி இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது
மட்டக்களப்பு எஸ். வரதராஜன்
