கதிர்காமக் காட்டுப் பாதை இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை இன்று 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 5.30 அளவில், உகந்தமலை முருகனாலயத்தின் அதிகாலை விசேட பூஜையின் பின்னர் திறந்துவைக்கப்பட்டது.
அம்பாறை,மொனராகலை அரசாங்க அதிபர்களின் வழிகாட்டலில் லகுகலை பிரதேச செயலாளர் என். நவநீதராஜா ஒழுங்கமைப்பில், அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் காட்டுப்பாதை திறந்து வைக்கப்பட்டது.
இன்று காலை கதிர்காமக் காட்டுப் பாதை இன்று காலை திறந்தவுடன் முதல் நாள் சுமார் 12ஆயிரம் பக்தர்கள் பயணித்ததாக பிரதேச செயலாளர் நவநீதராஜா தெரிவித்தார்
இதையும் படியுங்கள்: கதிர்காமம் புனித யாத்திரை எனப் பிரகடனம் செய்யப்படும்
இந்நிகழ்வில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச சபைத் தவிசாளர்கள் இந்து .பெளத்த மதகுருமார்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்
இம்முறை வழமைக்குமாறாக காட்டுப்பாதையால் பயணிப்போருக்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
உகந்தமலை முருகனாயத்திலிருந்து குமுக்கனூடாக யால வனப்பகுதியூடாக பாதயாத்திரீகள் செல்லும்போது யாரும் உணவுப்பார்சல்களையோ பிளாஸ்ரி தண்ணீர்ப்போத்தல்களையோ வழங்கமுடியாது.
இது கட்டாயம் அமுல்படுத்தப்பட்டுள்ளது பிளாஸ்ரிக் போத்தல்கள் உணவுக்கழிவுகள் என்பன காட்டு விலங்குகளுக்கு ஆபத்தாக அமைகின்றன.
எனவே இவற்றை வழங்கமுடியாது.என வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளனர்.
சா. நடனசபேசன்

