கிழக்கில் டெங்கு விழிப்புணர்வு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு அமைச்சினால் தொடர்ச்சியாக டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுக்கு அமைய டெங்கு குடம்பிகள் பரவக்கூடிய நீர் நிலைகள் காணப்படுகின்ற இடங்களை இனம் கண்டு அவற்றை சுத்தப்படுத்தும் செயற்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



இதேவேளை மட்டக்களப்பு வான் படை வீரர்களால் முன்னெடுக்கப்பட்ட டெங்கு சிரமமான நிகழ்ச்சி இன்று (08) மட்டக்களப்பு வாவி வீதியில் வான் படை முகாமின் கட்டளையிடும் அதிகாரி விங் கமாண்டர் பாலசூரிய தலைமையில் இடம் பெற்றது
வாவிக்கரை வீதியின் இரு மருங்கிலும் காணப்பட்ட டெங்கு குடம்பிகள் உருவாகக் கூடிய கழிவுப் பொருள்கள், குப்பைகள், பிளாஸ்டிக் பொருள்கள் என்பன சேகரிக்கப்பட்டு அப்பகுதி சுத்தப்படுத்தப்பட்டது.
மட்டக்களப்பு வரதன்
