அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்ய இருக்கைப்பட்டி கட்டாயம்

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் இருக்கைப் பட்டி அணிவது கட்டாயமாக அமல்படுத்தப்படுவதாகத் தேசிய வீதிப் பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.

வாகனங்களின் முன்னிருக்கை பயணிகள் மட்டுமன்றி பின்னிருக்கைகளில் அமர்ந்து பயணிப்பவர்களும் இருக்கைப் பட்டி அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக்காலம் எதிர்வரும் 19ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

எனவே, ஜூன் 20 முதல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேசிய வீதிப் பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.