அத்தனகலை கரஸ்னாகலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (16) காலை 8.00 மணி முதல் நாளை (17) அதிகாலை 3.00 மணி வரை 19 மணித்தியாலங்களுக்கு கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படுவதாகத் தேசிய நீர் வழங்கல்,வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கம்பஹா மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதி, கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதி, மஹரை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதி, வெலிவேரியா, பெலும்மஹரை, ரதுபஸ்வலை, மினுவாங்கொடை, அஸ்கிரியா, உடுகம்பொலை, ஓபாத்தை, அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ரண்பொகுணுகமை வீட்டுத் திட்டம், ஊராபொலை, அத்தனகலை, படலீயா, வத்துபிட்டிவலை, நிட்டம்புவை, வேயங்கொடை, கலகெடிஹேனை, திஹாரி, நைவலை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் நீர் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தேசிய நீர் வழங்கல்,வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
