மண்முனை மேற்கு புதிய அரச கட்டடத் திறப்பு விழா

20 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கபட்ட ஆயித்தியமலை வடக்கு பிரதேச கிராம பிரிவுக்கான கட்டடத் திறப்பு விழா நேற்று (11)பிற்பகல் மண் முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சத்தியா நந்தி நமசிவாயம் தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டார்

புதிய கட்டடத் தொகுதியில் அரச ஊழியர்களுக்கான சகல வசதிகளும் கூடிய கடமையாற்றும் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன

ஆயித்தியமலை போலீஸ் நிலையப் பொறுப்பு அதிகாரி, இப்பகுதிக்கான பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரி, கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் இந்தத் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.