கொழும்பு கொச்சிக்கடை, புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவையொட்டி இன்று (13) விசேட போக்குவரத்து திட்டமொன்று அமல்படுத்தப்படுவதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 02.30 முதல் இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியில் திருச்சொரூப பவனி கடற்கரையோரப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீதிகளில் வீதி உலா வருகிறது.
