பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட சுரவனையடி ஊற்று விநாயகர் வித்தியாலயத்திற்கான புதிய வகுப்பறை கட்டடத் தொகுதி திறப்பு விழா/ மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
பின்தங்கிய பிரதேச பாடசாலைகளுக்கு வேண்டிய பௌதிக வளங்களை வழங்குமுகமாக இப்பாடசாலையில் நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த புதிய வகுப்பறை கட்டடத் தொகுதி இப்பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் ஊடகவியலாளர் திருமதி வரதராஜன் வேணுகா அவர்களின் முயற்சியினால் சுவிடன் நாட்டில் வசிக்கும் முன்னாள் மண்டூர் ஓட்டு தொழிற்சாலை முகாமையாளர் வடிவேல் சந்திரகுமார் அவர்களின் நிதி அனுசரணையின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாடசாலையின் புதிய வகுப்பறை கட்டடத் தொகுதிக்கான திறப்பு விழா பாடசாலை அதிபர் திருவருட்செல்வன் தலைமையில் நேற்று (16) நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலய கல்வி அலுவலகத்தின் கோட்டக் கல்வி அதிகாரி ஜமுனாகரன் கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்தார்
இதேவேளை இப்பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் 5 வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாடசாலை சீருடை,கற்றல் உபகரணங்கள் என்பன சந்திரகுமார் அவர்களின் நண்பன் சுவிடன் நாட்டில் வசிக்கும் யாழ்ப்பாணம் கோப்பையைச் சேர்ந்த ராஜதுரை குலேந்திரராஜா அவர்களின் எழுபதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நிதி அனுசரணையின் கீழ் இங்கு வழங்கப்பட்டது
கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்ற இந்த வைபவத்தில் வலயக் கல்வி அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் சந்திரகுமார் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள்,முன்னாள் பொது சுகாதார உத்தியோகத்தர் எஸ் எம் முனாஃபர்,
ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
எஸ். வரதராஜன், மட்டக்களப்பு






