கல்கிஸை வீடொன்றில் தனியாக வசித்தவர் சடலமாக மீட்பு

கல்கிஸ்ஸை, படோவிட்டை பகுதி வீடு ஒன்றில் தனியாக வசித்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 54 வயதுடைய ஒருவர் எனப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த நபர் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதுடன், அவரது கழுத்துப் பகுதியில் சிறிய வெட்டுக் காயம் ஒன்று காணப்படுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.