மட்டக்களப்பில் ராணுவம் தங்கியிருந்த பாடசாலைக் கட்டடங்கள் விடுவிப்பு!

மட்டக்களப்பு வலய கல்வி திணைக்களத்தி ற்கு உட்பட்ட சிங்கள மகா வித்தியாலயத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தங்கி இருந்த ராணுவத்தினர் தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, பிரதி பாதுகாப்பு அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளுக்க அமைய படையினர் பாடசாலைக் கட்டடத்தை விடுவித்துள்ளனர்.

இதனை அடுத்து திரு.பிரபு நேற்று 29.10.2026 மாலை அங்கு விஜயம் செய்து தற்போது பாடசாலையின் நிலவரம் பற்றிய ஆராயுமுகமாக கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அப்போது பாடசாலையின் தற்போதைய நிலைமை பற்றியும் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி பணிகள் பற்றியும் மட்டு வலய கல்விப் பணிப்பாளர் எஸ் ரவியிடம் கலந்துரையாடினார்.

பாராளுமன்ற உறுப்பினரின் இந்த விஜயத்தின்போது கல்வித் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், பிரதேச சபையின் உறுப்பினர்கள், பாடசாலையின் ஆசிரியர் முதலானோர் கலந்து கொண்டனர்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த பல வருடங்களாக அரச கட்டடக் காணிகளில் இராணுவம் தங்கி இருந்ததைத் தொடர்ந்து பொதுமக்களின் வேண்டுகோளுக்கு அமைய தற்போது கட்டங்கட்டமாக அவை விடுவிக்கப்பட்டு வருகின்றன.

எஸ்.வரதராஜன்