கொழும்பு மாவட்ட அபிவிருத்தி செயல் திட்டத்திற்கு ஆயிரம் பில்லியன்!

கொழும்பு மாவட்டத்தில் பிரஜா சக்தி வேலைத்திட்டத்தின் கீழ், 751 அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்த 1.107 பில்லியன் ரூபாய் நிதியை அரசாங்கம் ஒதுக்கிள்ளது.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு சமுதாய வலுவூட்டல் அமைச்சர் டாக்டர் உபாலி பன்னில ஹோமாகமையில் நடந்த வைபவமொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மீன்வளர்ப்பு, ஆடைத் தொழிற்றுறை, உணவு உற்பத்தி, விவசாயம் உள்ளிட்ட துறைகளின் உள்கட்டமைப்பு, வாழ்வாதார அபிவிருத்திக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.