மட்டு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் பெறுமதியான துவிச்சக்கர வண்டிகளை வழங்கும் வைபவம் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி எஸ். சத்தியானந்தி தலைமையில் இன்று 30.10.2026 நண்பகல் பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, தெரிவு செய்யப்பட்ட அஸ்வெசுமை பயனாளிகளின் குடும்பத்தில் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களுக்கான துவிச் சக்கர வண்டிகளை வழங்கினார்.
இன்றைய இந்த நிகழ்ச்சிக்குக் கல்வித் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலக சமுர்த்தி வங்கி முகாமையாளர்,பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரதேச செயலக உயர் அதிகாரிகள், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
எஸ்.வரதராஜன்



