பல பகுதிகளில் இன்று (10) 100 மிமீ மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
குறிப்பாக மேல், சபரகமுவை, மத்திய,ஊவா மாகாணங்களிலும் காலி,மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்கள் ம,பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
