“எமது மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதற்காகவே பிரதமர் அவர்களால் கல்வி மறுசீரமைப்பு பணிகள் நேர்த்தியாகவும் துரிதமாகவும் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இளைஞர்கள் எதிர்காலத்தில் நாட்டை எவ்வாறு முன்னேற்றுவது என்பது தொடர்பான விடயங்கள் அடங்கியுள்ளன”
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மட்டு கல்வி வலயத்திற்குட்பட்ட இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இவ்வாறு அவர் கருத்து தெரிவித்தார்.
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி அபிவிருத்திச் சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில், இப்பாடசாலையில் நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த, பாண்ட் வாத்தியக் குழுவினருக்கான மூன்று லட்சம் ரூபாய் பெறுமதியான இசைக்கருவிகளையும் உபகரணங்களையும் வழங்கினார்.
இவற்றைக் கையளிக்கும் வைபவம் பாடசாலையின் அதிபர் கே. பகிரதன் தலைமையில் நேற்று நண்பகல் 26.10 2026 நடை பெற்றது.
இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கந்தசாமி பிரபு இவ்வாறு தெரிவித்தார்
இன்றைய இந்த நிகழ்ச்சிக்குக் கல்வித் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், மட்டு மாநகர சபை உறுப்பினர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(எஸ்.வரதராஜன்)



