பரீட்சைக்கு சமூகமளிக்க முடியாத மாணவர்களுக்கு வேறு நாள்!

2026 அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்கு சமூகமளிக்க முடியாத மாணவர்களுக்கு வேறு ஒரு நாளை வழங்க தீர்மானித்துள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் அழகியல் பாட செய்முறை பரீட்சை நடைபெறுகின்றது. பரீட்சைக்கு அனர்த்தங்கள் காரணமாக செல்ல முடியாமல் போயுள்ளதாகக் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களைக் கொண்டு, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை வழமைக்குத் திரும்பியவுடன் செய்முறை பரீட்சைக்கான வேறு ஒரு தினத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.