காலி-பத்தேகமை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

காலி-பத்தேகமை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து பெண்ணெருவர் காயமடைந்தார்.

காலி – பத்தேகமை, ஹல்பேதொட்டை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (27) காலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

காரொன்றில் வந்த குழுவினர் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இதில் காயமடைந்த ஆண் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.