மன்னார் வெற்றிநாயகி ஆலய சமூகத்தின் மரபு நாடகம் இன்று (25) ஆரம்பமாகியது.
மன்னார், பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய சமூகம் ஏற்பாடு செய்திருக்கும் ‘புனித அருளானந்தர்’ மரபு நாடகம் இன்று (25.09.2026) ஆரம்பமாகியது.
இரண்டு நாள்களை உள்ளடக்கியதான ‘புனித அருளானந்தர்’ மரபு நாடகம் இன்றும் நாளையும் அரங்கேறுகிறது.
‘புனித அருளானந்தர்’ மரபு நாடகம் பேசாலை, புனித பத்திமா மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெறும்.
எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிறு காலை திருப்பலியுடன் மரபு நாடகம் நிறைவடையும்.
‘புனித அருளானந்தர்’ மரபு நாடகம 36 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் மேடையேற்றப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
குருசுப்புலவர் என அழைக்கப்படும் பேசாலையைச் சேர்ந்த அவுறான் செபஸ்தியான் குருஸ் என்பவரால்; ‘புனித அருளானந்தர்’ மரபு நாடகம், 1962ம் ஆண்டு எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜோசப் பெர்னாண்டோ, மன்னார்
