22ஆவது திருத்தம் மீது பாராளுமன்ற விவாதம் இன்று

22ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பு இன்று (25) பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம், நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று (25) இரவு 7 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.

இவ்விரு சட்டமூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இன்று அதன் இறுதி நாள் விவாதம் நடைபெறுகின்றது.

22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற மக்கள் வாக்கெடுப்பு தேவையில்லை எனவும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதேவேளை, நீதித்துறை (திருத்தச்) சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விவாதம் நிறைவடைந்த பின்னர் இரு சட்டமூலங்கள் மீதும் இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.