திலித் கட்சியில் இணைந்தார் பெரமுன லலித்

திலித் கட்சியில் இணைந்தார் பெரமுன லலித் எல்லாவலை.

களுத்துறை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பண்டாரகம முன்னாள் பிரதான அமைப்பாளருமான லலித் எல்லாவல சர்வஜன அதிகாரத்துடன் இணைந்துள்ளார்.

லலித் எல்லாவல சர்வஜன அதிகாரத்தின் களுத்துறை பிரதி மாவட்டத் தலைவராகவும், அதன் உயர்பீட உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம், ‘சர்வஜன அதிகாரத்தின்’ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீரவினால் கட்சியின் தலைமையகத்தில் வைத்து லலித் எல்லாவலவுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

களுத்துறை மாவட்டத்தின் அரசியல் மற்றும் அமைப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், மக்கள் மையப்படுத்தப்பட்ட புதிய அரசியல் பயணத்திற்கு லலித் எல்லாவலவின் அனுபவமும் பங்களிப்பும் சர்வஜன அதிகாரத்திற்கு புதிய பலத்தை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.