அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று (20) ஆரம்பமாகியுள்ளன.
இப்பணி இன்று முதல் ஒகஸ்ட் 25 வரை தொடர்ச்சியாக நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முடிந்ததும், இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிவுகளை வெளியிடப் பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான (A/L) விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி முதல் தொடங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.
