கடுவலை ரங்கடு ஸ்ரீ முத்துமாரியம்மன் தீர்த்தோற்சவம் இன்று (16) நடைபெறுகிறது.
கடுவலை ரங்கடு பத்தினி (ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின்) தேவாலயத்தின் வருடாந்த திருவிழா தீர்த்தோற்சவம் இன்று (16) காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறுகிறது.
இதனையொட்டி, கடுவலை – அவிசாவளை – கொழும்பு பிரதான பஸ் வழித்தடத்தில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பத்தினியம்மன் தெருவுலா 143ஆம் வீதி வழியாக ஆரம்பமாகி, அவிசாவளை – கொழும்பு பேருந்து வழித்தடத்தின் ஊடாக கடுவலை ராஜசிங்க பாலத்தைக் கடந்து தோட்டுப்பொலை (துறையடி) பகுதியை நோக்கிச் செல்லும்.
அங்கு நீர்வெட்டும் சடங்கு நிறைவடைந்த பின்னர், அதே வழியாக கடுவலை சந்தியைக் கடந்து மீண்டும் ஆலயத்தை வந்தடையும்.
ஊர்வலம் நடைபெறும் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக வழிகளைப் பயன்படுத்துமாறு அந்தப் பகுதி ஊடாக பயணிக்கும் பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எஸ். ஆர். இரவீந்திரன்
