பிரபல பாடகி கானக்குயில் எஸ். ஜானகி காலமானார்.

கானக்குயில் எஸ். ஜானகி மைசூரில் நேற்று (11) இரவு காலமானார்

தென்னிந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்று அழைக்கப்பட்ட பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி சனிக்கிழமை (ஜூலை 11) காலமானார். அவருக்கு வயது 88.

1957ல் இசைப்பயணத்தை தொடங்கிய அவர், தனித்துவமான குரலுக்காகவும், பல்வேறு இந்திய மொழிகளில் சரளமாகப் பேசும் திறனுக்காகவும் கலையுலகில் ‘ஜானகி அம்மா’ என்றும் அழைக்கப்பட்டவர்.

வயது மூப்பின் காரணமாக உடல்நலன் பாதிக்கப்பட்டதால், பாடகி ஜானகி சனிக்கிழமை அதிகாலை இந்தியாவின் மைசூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்: இயக்குநரும் நடிகருமான கே. பாக்கிராஜ் காலமானார்!

அங்கே கானக்குயில் எஸ். ஜானகி உயிர் பிரிந்தது என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

திரைப்படங்கள், தனிப்பட்ட பாடல்கள், தொலைக்காட்சி, வானொலி எனப் பலவற்றிலும் 48,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் எஸ்.ஜானகி.

அவரது தாய்மொழி தெலுங்கு. இருப்பினும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி தமிழ் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடத்தை பெற்ற அவர், இசைத்துறையில் கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் பின்னணிப் பாடகியாக வலம் வந்துள்ளார்.

ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும் எஸ்.ஜானகி 4 தேசிய திரைப்பட விருதுகளையும் 33 மாநிலத் திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார்.

ஜானகியின் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் என்று பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.