இன்று காலை மட்டக்களப்பு நகரில் தீ விபத்து ஏற்பட்டது

மட்டக்களப்பு நகரில் தீ விபத்து ஏற்பட்டதில் இரு கடைகள் எரிந்து முற்றாக நாசம் அடைந்துள்ளன.

மட்டக்களப்பு மாநகரில் அமைந்துள்ள கைப்பேசி விற்பனை நிலையத்தில் இன்று அதிகாலை மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் இருகடைகள் முற்றாக எரிந்து சாம்பலானதாப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபை தீயணைக்கும் படைப் பிரிவினர், போலீசார் மேற்கொண்ட முயற்சியால் தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

இன்று காலை மட்டக்களப்பு நகரில் தீ விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக காத்தான் குடி நகர சபை தீயணைக்கும் பிரிவினரும் வரவழைக்கப்பட்டுத் தற்போது மட்டக்களப்பு போலீசார் ஏற்பட்ட விபத்து சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பாடசாலை நேரம் என்பதால் நகரில் காணப்படுகின்ற தேசிய பாடசாலைக்கு வரும் மாணவர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டனர்.

இந்த தீ விபத்து சம்பவத்தினால் தூர இடங்களுக்கான போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டன.

எஸ்.வரதராஜன்

மட்டக்களப்பில் டெங்கு நோய் பரவுதலை தடுக்க நடவடிக்கை