நாளாந்தம் விபத்தால் பறிபோகும் இலங்கையர் உயிர் காக்கும் செயலமர்வு

விபத்தால் பறிபோகும் இலங்கையர் உயிர் காப்பாற்றுவதற்கான தேசிய விழிப்புணர்வு பிரதான நிகழ்வு மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

விழிப்புணர்வு நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் மாவட்ட தொற்றா நோய் தடுப்பு அதிகாரி எம்.ரூதேசன் ஏற்பாட்டில் பிராந்திய சுகாதார பணிமனையில் இன்று இடம் பெற்றது.

நாடளாவிய ரீதியில் தேசிய விபத்துத் தடுப்பு ஆலோசனைக் குழு மற்றும் சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவினரினால் விபத்துக்களால் பறிப்போகும் உயிரை காப்பாற்றுவதற்கான செயற்திட்டம் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இன்று 06 திகதி சாலை விபத்துத் தடுப்பு தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 300 தொடக்கம் 350 மரணங்களும் பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர் மருத்துவ முகாம்

மாவட்டத்தில் விபத்தால் பறிபோகும் இலங்கையர் உயிர் காக்கும் செயலமர்வில் கடந்த வருடம் கிடைக்கப் பெற்ற புள்ளிவிவர தரவுகளின் படி 31000 நபர்கள் உள் நோயாயராகவும் வெளிநோயாளராக 8000 மேற்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் உள்ள அரச மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படும் நோயாளிகளில் கணிசமான சதவீதத்தினர் விபத்துக்களாலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவற்றுல் விழுதல், வீதி விபத்துக்கள், தீக்காயங்கள், மின் அதிர்ச்சி, வெட்டு காயங்கள், பணியிட விபத்துக்கள், நீரில் மூழ்குதல், விலங்குகள் கடித்தல் மற்றும் வீட்டு விபத்துக்கள் ஆகியவை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

சுகாதார அமைச்சானது விபத்துக்களின் தாக்கத்தைக் குறைப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்

எஸ். வரதராஜன்