வெளியான சாதாரண தரப் பரீட்சையில் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட 4 ஆம் கொலணி வேப்பையடித்தோட்டம் வாணி மகா வித்தியாலய மாணவன் பவனசிங்கம் நிருசாந் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக 9 ஏ சித்தி பெற்று சாதனைபடைத்துள்ளதாக அதிபர் பி. யோகராசா தெரிவித்தார்.
கஷ்டப்பிரதேச பாடசாலையில் இச்சாதனை நிகழ்திய மாணவனையும் கற்பித்த ஆசிரியர்களையும் அதிபர் பி.யோகராசா பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
