மட்டக்களப்பு கால்நடை வைத்திய அலுவலகப் புதிய கட்டடமும் வைத்தியர் விடுதியும் இன்று (18) திறந்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு அரச கால்நடை வைத்திய அதிகாரி ஜி.லிங்கேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாகக் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர கலந்துகொண்டு, மாகாணத்தில் முதல் தடவையாக 40 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய நவீன வசதிகளுடன் கூடிய கட்டடத்தினைத் திறந்து வைத்து பணிகளையும் ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஏ. எல். எம். அஸ்மி, கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் சுல்பிகார் அபூபக்கர் உள்ளிட்ட கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

இவ்வாண்டு ஜனாதிபதியினால் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி திணைக்களத்திற்குச் சுமார் 650 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் மட்டக்களப்பு அரச கால்நடை வைத்திய அலுவலகமும் வைத்தியர் விடுதியும் இன்று திறந்து வைக்கப்பட்டநிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஆளுநர் இதனத் தெரிவித்தார்
அரசாங்க அதிபர், ஆளுநர் நிகழ்வு ஏற்பாட்டாளர்களால் இங்குக் கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
எஸ். வரதராஜன்



