தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட தேசிய பாடசாலைகளில் டெங்கு பரிசோதனை முன்னெடுப்பு
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் டெங்கு பரிசோதனை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களமும் மட்டக்களப்பு மாநகர சபையும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்ததாக இன்று (18) இந்த டெங்கு பரிசோதனை செயற்திட்டம், கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். உதயகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது
அதிகளவு மாணவர்களைக் கொண்ட பகுதிகளில் பாடசாலை சுற்றுப்புற சூழல் பூந்தோட்டம், வடிகான்கள்,கழிவறைகள்,என்பன பூரணமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
சுகாதார அமைச்சின் அறிக்கைகளின் படி மட்டக்களப்பு மாவட்டம் அதிகம் டெங்கு நோயாளிகள் காணப்படுகின்ற மாவட்டமாக இனம் காணப்பட்டுள்ள படியினால், தேசிய செயல்திட்டத்தின் நான்காவது நாளான இன்று டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
எஸ். வரதராஜன்






