ஜி7 உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டின் ஈவியன் நகரில் ஜூன் 15 முதல் 17 வரை பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்கரானின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.
இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,பிற உலகத் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஸெலன்ஸ்கியுடன் ஜி-7 தலைவர்ககள் சிறந்த முறையில் கலந்துரையாடியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைனுடன் ரஷ்யா போர் நிறுத்த உடன்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் திரு. டிரம்ப் தெரிவித்துள்ளார்.
