இந்தியாவில் நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தத் தேர்வு முடியும் வரையில் ‘டெலிகிராம்’ செயலிக்கு மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.
இந்தத் தடையை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு உறுதிசெய்துள்ளது. ஜூன் 22ஆம் தேதி முதல் செயலி வழக்கம்போல் செயல்படும் என்று கூறப்பட்டது.
இந்தியாவில் ஆண்டுதோறும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நீட் (இளங்கலை மாணவர்) நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
அந்த வகையில், நடப்புக் கல்வி ஆண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 3ஆம் தேதி நடந்தது. வினாத்தாள் கசிந்ததால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து நீட் மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடத்தப்படும் என்றும் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை அறிவித்தது.
இந்நிலையில், நீட் மறுதேர்வுக்கான தேர்வு அட்டையைத் தேர்வு எழுதும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து வருகின்றன
