ரஷ்ய விமான விபத்தில் 50பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் இன்று இடம்பெற்ற விமான விபத்தில் 50பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அங்கார எயார்லைன்ஸுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் இன்று 50 பேருடன் சென்று தரையிறங்குவதற்கு முன்னர் காட்டுப் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது.

முதலில் ராடார் திரையிலிருந்து விமானம் காணாமற்போனதாக அறிவிக்கப்பட்டது. விமானத்தைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

பின்னர் விமானம் காட்டுப் பகுதியில் வீழ்ந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.