வன்முறையற்ற நாடுகள்: 67ஆவது இடத்தில் இலங்கை!

வன்முறை அல்லது வன்முறைக்கான அச்சம் இல்லாத நிலையை அளவிடும் உலக அமைதிக்கான சுட்டெண் [Global Peace Index] தர வரிசையில் இலங்கை 67ஆவது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளில் பூட்டானை அடுத்து இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது. 163 நாடுகளின் அமைதித்தன்மையை மதிப்பிட்டு, Institute for Economics and Peace (IEP) என்ற பொருளாதார அமைதி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.