கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து, இன்று (12) அதிகாலை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர் நோக்கிப் புறப்பட்ட ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மின்னல் தாக்கத்திற்கு உள்ளானதால் திரும்பி வந்துள்ளது.
217 பேருடன் அதிகாலை 1.40 இற்குப் புறப்பட்ட யூஎல் 606 விமானம் பழுதானதால் மீண்டும் விமான நிலையம் வந்திருக்கிறது. மீண்டும் காலை 6.06 இற்கு எயார் பஸ் ஏ330 விமானத்தின் மூலம் பயணிகள் சிட்னி அனுப்பிவைக்கப்பட்டனர்.
மின்னல் தாக்குதலுக்கு உள்ளான விமானம் ஆய்வுக்காகவும் திருத்தப் பணிகளுக்காகவும் அனுப்பிவைக்கப்பட்டது.
