ஜனாதிபதிக்கு இன்று 58ஆவது பிறந்த நாள்!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (24) தனது 58ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதி மாத்தளை தெவஹுவை பிரதேசத்தில் பிறந்த அநுர குமார திசாநாயக்கவின் அரசியல் பயணம் பல்கலைக்கழக மாணவர் அரசியலூடாக ஆரம்பமானது.

தம்புத்தேகமை ஆரம்பப் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய அநுர குமார திஸாநாயக்க தம்புத்தேகமை மத்திய மகா வித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வியைக் கற்றார். பின்னர் களனிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உயர்கல்வியை கற்றுப் பட்டதாரியானார்.

1987ஆம் ஆண்டில் சோசலிச மாணவர் சங்கத்துடன் இணைந்து அரசியலுக்குள் பிரவேசித்த அவர் 1997ஆம் ஆண்டில் அதன் தேசிய அமைப்பாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். 2000ஆம் ஆண்டில் முதன்முறையாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவான அநுர குமார திசாநாயக்கஇ 2004ஆம் ஆண்டில் விவசாய அமைச்சராகவும் கடமையாற்றினார்.

2014ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியின் (துஏP) தலைமைப் பொறுப்பை ஏற்ற அவர் 2019ஆம் ஆண்டில் தேசிய மக்கள் சக்தி என்ற புதிய கட்சிளை உருவாக்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு அவர் 3.16 சதவீத வாக்குகளை பெற்றுக் கொண்டதோடு 2024 ஜனாதிபதித் தேர்தல் வெற்றி வரை அவர் பயணித்த அரசியல் பயணம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு சிறப்பான அத்தியாயமாகும்.

பல தசாப்த கால அரசியல் அனுபவங்கள் சவால்கள் தோல்விகள் மற்றும் வெற்றிகளுக்கு மத்தியில் 2024 செப்டம்பர் 22ஆம் திகதி நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டார்.

மக்கள் உங்கள் மீது வைத்துள்ள எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிஇ நாட்டிற்குச் சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்கத் தேவையான சக்தியும் ஞானமும் என்றென்றும் கிடைக்க வேண்டுமென நாம் வாழ்த்துகிறோம்.